சென்ற வருடம் ஆகஸ்ட் 16 அவர் வந்த போது இருந்த பரபரப்பு மீண்டும் தொற்றிக்கொண்டது, மதியம் அண்ணா கூப்பிட்டு சொன்னபோது. உடனே மனைவியிடம் கைத்தொலைபேசியில் சொன்னபோது, மறுமுனயில் நிசப்தம். சில நொடிகளுக்கு பிறகு சொன்னது சந்தோஷமாக இருந்தது "எப்படி நம்ம ஊர் இந்த பட்டியலில்?"
சென்ற முறை அவர் வந்தது பள்ளிக்கூடத்தை பார்க்கவும், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களை சந்திக்கவும் தான். பள்ளிக்கூடம் ஊரிலிருந்து 16 கி. மி. தள்ளி இருப்பதால் ஊருக்குள் வரவேயில்லை. தான் நினைத்தபடி பள்ளி அமைந்திருப்பதாக சொன்னபோது அடைந்த சந்தோஷத்திற்கு அளவில்லை. மனைவியிடம் பள்ளியை உன் வீடு போலவும், பள்ளி குழந்தைகளை உன் குழந்தைகள் போல பாவிக்கவும் சொன்னார். அந்த பெரிய கருப்பு நிற காரில் ஏறும் முன் மனநிறைவோடு சொன்னார் "குழந்தைகளும், ஆசரியர்களும் நல்ல நிலையில் உள்ளனர்" . பின்னர் மலை அடிவாரத்தில் உள்ள அவர் இருப்பிடத்தில் தன் சிஷ்யர்களிடம் எங்கள் ஊர் பள்ளியை பற்றி சிலாகித்து சொன்னாராம்.
அப்போது வந்தபோது ஊருக்குள் வருமாறு அழைத்தோம், பின்னர் வருகிறேன் நிறைய வேலைகள் காத்துக்கொண்டிருப்பதாக சொன்னார். அது மறுபடியும் நிறைவேறும் என்று நம்பவில்லை, அதுவும் எங்கள் ஊரில் ஒரு சத்சங்கம் என்று சொன்னபோது மக்கள் அனைவர்க்கும் ஆனந்தம்.
டிசம்பரில் அவர் வருகிறார், காத்திருக்கிறோம் !!
Saturday, 27 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment