Wednesday 26 August, 2009

கர்மா

அந்த இள வயது செல்வந்தர் தன்னுடைய அதி வேக காரில் கொச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது முன்னே சென்ற பைக் மீது மோதி விடுகிறார், இதை சற்றும் எதிர்பாராத பைக் ஓட்டுனர் தவறி கீழே விழுந்துவிடுகிறார். நமது செல்வந்தர் உடனே காரின் வேகத்தை அதிகப்படுத்தி நிற்காமல் சென்றுவிடுகிறார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த ஒரு பெருங்கும்பல் காரை துரத்திக்கொண்டு பின்னே செல்கிறது. அதிவேகமாக சென்ற செல்வந்தர் காரை ஒரு மறைவான இடத்தில நிறுத்தி கீழே இறங்கி தன் வண்டிக்கு பாதிப்பு ஏதும் உண்டா என்று பார்த்துகொண்டிருந்தபோது அந்த கும்பல் அவரை சூழ்ந்துகொண்டது. பேச்சு அதிகமாக ஆக சூழ்நிலையே ஒரு போர்களம் போல் ஆகிவிடுகிறது. கும்பலில் இருந்த ஒருவன் கத்தியை எடுத்து செல்வந்தரின் வயற்றில் நான்கு முறை குத்த அந்த இடத்திலேயே அவரின் உயிர் பிரிகிறது. கும்பல் தப்பியோடிவிடுகிறது.

போலீஸ் விசாரணையில் ஒருவன் சிக்குகிறான், அவனின் வாக்கு மூலத்தில் தெரிய வருவது யாதெனில் அந்த கும்பல் ஒரு கூலிப்படையை சேர்ந்தது, கூலிக்காக அன்று ஒரு கொலை செய்ய அவர்களும் கொச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தர்களாம், இடையில் இந்த திருப்பம். இவர்கள் கொலை செய்ய திட்டமிட்ட நபர் தப்பினார் ஆனால் வேறொருவர் பலி ஆனார். இது வன்றோ கர்மா!